
விஷாலைப்
போலவே ரசிகர்களும் தீராத விளையாட்டு பிள்ளையை காண ஆவலாக இருக்கிறார்கள்.
தனுஸ்ரீ தத்தா, நீது சந்திரா, சாரா என்று மூன்று கிளாமர் குயின்களல்லவா
நடித்திருப்பது.
இவர்களுடன்
சினேகாவும் நடித்திருக்கிறார் என்பது பழைய செய்தி. படத்தின் போக்கையே
மாற்றி அமைக்கும் கதாபாத்திரம் என்பதால்தான் சினேகா நடிக்க ஒத்துக்
கொண்டாராம். அவரது கேரக்டர் என்ன என்பது சஸ்பென்ஸ்.
படத்தில் இன்னொரு சஸ்பென்சும் இருக்கிறது. “தீராத விளையாட்டு
பிள்ளையில் சினேகாவையும் சேர்த்து நான்கு ஹீரோயின்கள் என்று நினைத்துக்
கொண்டிருக்கிறார்கள். ஐந்தாவதும் ஒரு ஹீரோயின் இருக்கிறார். அவர் யார்
என்பதை சஸ்பென்ஸாக வைத்திருக்கிறோம். படம் பார்க்கும் போதுதான் அவர்
யார்? அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்க என்ன காரணம் என்பது
ரசிகர்களுக்கு தெரியவரும் என்றார் விஷால்.
அழுத்தி கேட்டும் அசையவில்லை விஷால். ரகசியம் காப்பதில் விஷாலுக்கு டாக்டரேட் தரலாம்.