கமல்ஹாசன் கருத்து... சிவசக்தி பாண்டியன் பதில்!

கடந்த
சில தினங்களுக்கு முன் ‘ஆயிரத்தில் ஒருவன்’ ட்ரெய்லர் வெளியீட்டு விழா
நடந்தது. இதில் பேசிய பலரும் அப்படம் ஆங்கில படத்திற்கு இணையாக இருப்பதாக
பேசினர்.
இறுதியாக
பேசிய கமல், “இது ஹாலிவுட் படம் மாதிரி இருக்குன்னு சொல்லாதீங்க. ஒரு
படத்தை இன்னொரு படத்தோடு ஒப்பிட்டு பேசவே கூடாது. வைரமுத்து, ஷெல்லி
மாதிரி எழுதுறாருன்னு சொல்ல முடியுமா?” என்றார்.
இறுதியாக
பேசியது கமல்தான் என்பதால் அந்த மேடையில் அதற்கு பதில் சொல்ல முடியாத நிலை
ஏற்பட்டது. ஆனால் ‘தீராத விளையாட்டு பிள்ளை’ ஆடியோ வெளியீட்டு விழா
மேடையில் இதற்கு பதில் சொன்னார் தயாரிப்பாளர் சங்க செயலாளரும், திரைப்பட
நலவாரிய உறுப்பினருமான சிவசக்தி பாண்டியன்.
“முன்னூறு கோடி, ஐநூறு கோடி செலவு செய்து ஹாலிவுட்டில் படம்
எடுக்கிறார்கள். ஆனால் நமது ஊரை சேர்ந்த இயக்குனர் ஒருவர் அதே மாதிரி
பிரமாண்டத்தை வெறும் முப்பது கோடியில் கொடுத்திருக்கிறார் என்றால் அதை
பாராட்ட வேண்டாமா? ஹாலிவுட் படம் மாதிரி எடுத்திருக்காருன்னு சொல்லாம வேற
எப்படி சொல்ல முடியும்?” என்றார் காட்டமாக. பின்பு ‘தீராத விளையாட்டு
பிள்ளை’ படம் பற்றி பேச துவங்கியவர், “தயாரிப்பாளரின் மகன்கள் எல்லாம்
பிரபல ஹீரோக்களாக வெற்றி பெறுவது என்னை போன்ற தயாரிப்பாளர்களுக்கு பெரும்
மகிழ்ச்சியை தருகிறது. விஷால் தமிழிலும், தெலுங்கிலும் முக்கிய ஹீரோவாக
இருக்கிறார்” என்று வாயார பாராட்டினார்.